Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு பலத்த ... சபரிமலையில் 14ல் மகரசங்கரம பூஜை; வெடி வழிபாட்டுக்கு தடை சபரிமலையில் 14ல் மகரசங்கரம பூஜை; வெடி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மகரஜோதி பெருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மகரஜோதி பெருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

05 ஜன
2023
03:01

சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி பெருவிழா ஜன.,14 நடைபெற உள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆங்காங்கே நடைபெறும் சமையலால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க இன்று முதல் பக்தர்கள் பெரிய பாத்திரங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மகரஜோதி பெருவிழாவுக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக உள்ளனர். மகரஜோதி நாளில் கடந்த ஆண்டுகளில் பம்பை மற்றும் புல்மேட்டில் நடைபெற்ற விபத்துக்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜோதி தெரியும் இடம் எல்லாம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜன.,12 க்கு பின்னர் பக்தர்களின் கியூ மரக்கூட்டம் தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஜன.,10 முதல் பக்தர்களில் பலர் ஜோதி தரிசனத்துக்காக மலையில் தங்குவார்கள் என்று போலீஸ் கணக்கிடுகிறது. இவ்வாறு தங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. ஜன.,13,14 தேதிகளில் தினமும் ஒரு லட்சத்தக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சன்னிதான சுற்றுப்புறங்களிலும், காடுகளிலும் தங்கும் பக்தர்கள் உணவு சமைக்கும் போது தீ விபத்து ஏற்படுவதை தடுக்க இன்று முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து பெரிய பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கூடுதல் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கும் படி தேவசம்போர்டுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) தலைமையில் பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜோதி முடிந்த பின்னர் பக்தர்கள் திரும்புவதற்கு ஆயிரம் பஸ்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 260 பஸ்கள் ஓடுகின்றன. மேலும் 800 பஸ்களை பத்தணந்திட்டை, எருமேலி, பொன்குன்னம் போன்ற இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar