பதிவு செய்த நாள்
24
ஜன
2023
11:01
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு அங்காளம்மன், ஆனந்தாய், பூங்காவனம் முப்பெரும் சக்திகளாக விளங்கும் சித்தர் பீடம் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழா, கடந்த 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 21ம் தேதி காலை 8:30 மணிக்கு லட்சுமி பூஜை, தன பூஜை, கோ பூஜை மற்றும் தீபாராதனையும், மாலை 5:30 மணிக்கு புனித மண் எடுத்தல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 22ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், நடந்தது. கும்பாபிேஷக தினமான நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையைத் தொடர்ந்து, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம் மற்றும் 9:45 மணிக்குமேல் 10:15 மணிக்குள் விநாயகர், அங்காளம்மன், ஆனந்தாய், பூங்காவனம் அம்மன் திருமேனிக்கும், பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மன்கள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் வேல்முருகன், கோபு, பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில், விழுப்புரம் குபேரன், கோடீஸ்வரன், குபேந்திரன், பாலாஜி, மதன், வினோத், பழனி, வாணியம்பாளையம் மோகன் திருமலை ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சவாமி தரிசனம் செய்தனர்.