பதிவு செய்த நாள்
24
ஜன
2023
12:01
கடையம்: கடையம் கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சிணாமூர்த்தி, னிபகவான், நவக்கிரஹங்கள் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். கோயிலில் வரும் 27ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று காலை அனுக்கை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 2ம் நாளான இன்று (24ம் தேதி) காலை 8 ணிக்கு திசாஹோமம், மூர்த்திஹோமம், பித்ரு சம்ஹார ஹோமம், துர்க்கா, சரஸ்வதி, ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. ௩ம் நாள் 25ம்தேதி காலை 8 ணிக்கு மிருத்ஸங்கிரஹணம், தீர்த்த ஸங்கிரஹனம், கன்யாபூஜை, திபூஜை காலை 11 ணிக்கு அன்னதானம், ணிக்கு அங்குரார்ப்பணம்,பாலிகாஸ்தாபனம், ரக்ஷாபந்தனம்,கலாகர்ஷணம், முதல்காலயாக சாலை பூஜை நடக்கிறது. 4ம் நாள் 26ம்தேதி காலை 8மணிக்கு விசேஷசந்தி 2ம் கால யாகசாலை பூஜை, அன்னதானம், மாலை 6 ணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 27ம்தேதி காலை 4 ணிக்கு 4ம் கால யாகசாலைபூஜை 5.30 ணிக்கு யாத்ராதானம், காலை 6 ணிக்கு கும்பம் எழுந்தருளல், காலை 6.45 ணிக்கு மேல் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. 7.15 ணிக்கு மூலஸ்தானம், பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம், தீபாராதனை மகாஅபிஷேகம் அன்னதானம் நடக்கிறது. இரவு 7 ணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, சுவாமி அம்பாள் வீதியுலா, சண்டிகேஸ்வரர், பைரவ பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் முருகன், கோமதி, ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.