வரதராஜபெருமாள் கோயில் வருஷாபிஷேகம்: உற்சவருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2023 05:01
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் கடந்த ஆண்டு பிப்., 6 ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் 48 நாட்களுக்கு பிறகு மண்டலாபிஷேகம் மார்ச் 27 ல் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:00 மணி தொடங்கி வருடாபிஷேக விழாவில் அனுக்கை, ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தன. பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்திருந்தனர்.