திருவண்ணாமலை : ரத சப்தமியை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆற்றில் சூலம் ரூபத்தில் அண்ணாமயைாருக்கு தீர்ததவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரத சப்தமியை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆற்றில் நடந்த தீர்ததவாரி விழாவில், ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமயைார், மற்றும் ரிஷப வாகனத்தில் திரிபுரசுந்தரி சமேத திருமாமுனீஸ்வர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.