அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே சிறுவாலை ஊராட்சி செல்லணகவுண்டன்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோயில் சன்னதி அம்மன் சிலையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அம்மன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.