திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா காப்புக்கட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2023 10:02
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவுக்கான முகூர்த்த கால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின்பு மூலவர்கள், 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப் புல் கட்டி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. பின்பு கோயில் பூஜாரிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. தினமும் சுவாமிகளுக்கு பூஜை நடைபெறும். பிப். 16ல் கப்பரை பூஜையும், மார்ச் 18ல் சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாத சுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை. பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து அம்மன் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார்.