பதிவு செய்த நாள்
15
பிப்
2023
05:02
உடுமலை: கடத்துார், கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் கோவில், மகா சிவராத்திரி விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது.
உடுமலை அருகேயுள்ள கடத்துார், அமராவதி ஆற்றங்கரையில், ஆயிரம் ஆண்டு பழமையான, கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா, வரும், 18ம் தேதி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, முதல் யாம பூஜை, கிருதா யுகத்தில், விநாயகப்பெருமான் பூஜை, ஈசானா முகம், பஞ்சகவ்யம் அபிேஷகம், செந்நிறப்பட்டு, வில்வ மாலை, சந்தனக்காப்பு அலங்காாரம். 2வது யாம பூஜை, இரவு, 9:00 மணிக்கு, திரேதாயுகம், சுப்ரமணியர் பூஜை, அகோரமுகம், பஞ்சாமிர்த அபிேஷகம் மற்றும் வெண்மஞ்சள் பட்டு, தாமரைப்பூ மாலை, அகில் காப்பு அலங்காரம். 3ம் யாம பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, துவாபர யுகம், பூஜை, திருமால் பிரம்மா, சத்யோஜாதமுகம், கொம்புத்தேன் அபிேஷகம், வெண்பட்டு, ஜாதிப்பூ மாலை, பச்சை கற்பூர காப்பு அலங்காரம். 4ம் யாம பூஜை, அதிகாலை, 3:00 மணிக்கு கலியுகம், பூஜை, இந்திரன், ரிஷிகள், வாமதேமுகம், கரும்புச்சாறு அபிேஷகம், பச்சை பட்டு, நந்தியா வட்டை பூ மாலை, ஜவ்வாது காப்பு அலங்காரம் பூஜைகள் நடக்கிறது.