பதிவு செய்த நாள்
15
பிப்
2023
05:02
பழநி: பழநி முருகனுக்கு நேற்று குறவன் குறத்தி இனத்தினர் தமிழகமெங்கும் இருந்து சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவில் முருகனை மணமுடித்த வள்ளிக்கு, வன வேங்கை கட்சியினர் மற்றும் வள்ளி பெருந்தகை பாசறையினரும், குறவன், குறத்தி இனத்தினர் ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாழும் குறவன், குறத்தி இன மக்கள் பழநிக்கு சீர்வரிசை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு தேன், தினைமாவு, மா, பலா வாழை, பழங்கள், கிழங்குகள் உள்ளிட்டவற்றை கூடைகளில் சீர்வரிசையாக கொண்டுவந்தனர். அலகு குத்தி, மேளதளங்கள் முழங்க பழநியில் முக்கிய வீதிகளில் சீர் வரிசையை எடுத்துச்சென்றனர். பாத விநாயகர் கோயில் அருகில் படைத்து வேலன் ஆட்டம் ஆடினர். வள்ளி சுனை அருகே வழிபாடு செய்தனர். மலைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.