திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நாட்டியாஞ்சலி துவக்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2023 07:02
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் பல்வேறு மாநில பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவக்கியது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனிஸ்வரபகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் வருடத்தோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி 18ம் ஆண்டு துவக்கவிழா 6 நாட்கள் நடைபெறும்.முதல் நாள் விழா நேற்று துவக்கியது விழாவில் பல்வேறு மாநில கலைஞர்கள் கலந்து கொண்டனர். நாட்டியாஞ்சலி விழாவை கலெக்டர் முகம்மது மன்சூர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் குத்து விளக்குயேற்றி துவக்கிவைத்தார். முதல் நாள் புதுச்சேரி ஜெயஸ்ரீ நாராயணன்.சென்னை வித்யா. நந்தினி சுரேஷ்.மதுரை சீதாலஷ்மி ஸ்ரீனிவாசன்.பெங்களூர் கௌசல்யா நிவாஷ் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மும்பை நரேஷ்பிள்ளை. சிங்கப்பூர் கவிதா வைத்தியநாதன். அபுதாபி ரூபி மாதூர்.அகமதாபாத் ஸ்மிதா சாஸ்திரி.புதுடெல்லி கரிமா ஆர்யா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்து பரதநாட்டிய குழுவினர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுக்களித்தனர்.