பதிவு செய்த நாள்
21
பிப்
2023
11:02
சிதம்பரம் : சிதம்பரம் நாட்டியாஞ்சலி மூன்றாம் நாள் விழாவில், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வீதியில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 18ம் தேதி துவங்கியது. வரும் 22ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்று, நாட்டிய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூன்றாம் நாளான நேற்று மாலை சென்னை வைகரை சங்கமித்ரன் பரதத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து, சென்னை நிருத்திய நாட்டிய பள்ளி மாணவியர் பரதம் ஆடினர். சென்னை தமிழ் இசைக்கல்லுாரி மாணவர்களின் திருஞானசம்பந்தர் நாட்டிய நாடகம் நடந்தது.தொடர்ந்து, சந்திரன், ராஜசேகர், சோனிகா, மணிழுகிலா, சயிந்தவன், மணீஷ் ஆகியோர் களரிப்பயட்டு நடனமாடி அசத்தினர். மேலும், மலேசியா நிருத்திய கலாஞ்சலி கலைக்கூட மாணவியர் பரதம், சிதம்பரம் ஆரபி அகிலன்,மலேசியா நர்த்தனா நுண்கலை பள்ளி மாணவியர் மற்றும் பெங்களூரு காவ்யா காசிநாதன் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.