பதிவு செய்த நாள்
25
பிப்
2023
10:02
திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், உத்திர விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.பங்குனி உத்திர விழாவின் ஏழாம் நாளில், கமலத்தேர் திருவிழா நடைபெறும். இந்நிலையில், கொரோனா காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, தேர் திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேர் பழுதடைந்து இருக்கும். எனவே, திருவிழாவிற்கு முன் மண்டபத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள தேரை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலோடு, நேற்று தேரை சீரமைக்கும் பணி, நடந்து வருகிறது.