மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2023 08:03
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு நகரிலுள்ளது பிரசித்தி பெற்ற மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் மாசி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு விழாவின் கொடியேற்றம் பிப்., 17ம் தேதி நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றத்தோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருவிழாவின் சிறப்பு நாளான நேற்று காலை பிரத்யேக பூஜைகளுக்கு பிறகு 8.30 செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுக்கும் "காழ்ச்சசீவேலி" நடந்தன. தொடர்ந்து 10 மணி அளவில் துவங்கிய அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டன. 11 மணிக்கு மேற்கு யாக்கிரை ஸ்ரீமூலஸ்தானத்தில் இருந்து செண்டை மேளம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் அம்மனின் வாளும் பீடவும் எழுந்தருளும் வைபவம் நடந்தன. 12 மணிக்கு அம்மனுக்கு பூரணச் சாந்தாபிஷேகம் நடைபெற்றது. மாலை 3.15 மணியளில் கோவில் வளாகத்தில் இருந்து 15 யானைகள் அணிவகுப்புடன் கோட்டைமைத்தானத்திற்கு அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாலை 5 மணிக்கு கோட்டைமைதானம் முன் பஞ்சவாத்தியம் முழங்க ஆடை அலங்காரத்துடன் 15 யானைகள் அணிவகுத்து நின்று முத்துமணி வண்ண குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தன. இதே நேரத்தில் விழா கொண்டாடும் உப கோவில்களான மேற்கு யாக்கறை, கொப்பம், வடக்கந்தறையில் இருந்து கேரள கலாச்சாரத்தை நினைவூட்டு வேடங்களின் ஊர்திகளும் 15 யானைகள் செண்டை மேளங்கள் முழங்க கோட்டை மைதானத்தினுள் அணிவகுக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து இரவு மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவிலிலும் உப கோவில்களிலும் பிரம்மாண்ட வான வேடிக்கை நடைபெற்றது. இன்று காலை ஏழு மணிக்கு ஸ்ரீமூலஸ்தானத்திற்கு அம்மனின் வாளும் பீடவும் திரும்பி எழுந்தருளி செல்வதோடு விழா நிறைவடைந்தன.