திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் சக்கர தீர்த்தக்குளத்தில் தீப ஆரத்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2023 08:03
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் நேற்று மாலை 6:30 மணி அளவில் மகா தீப ஆரத்தி விழா நடந்தது.
முன்னதாக மாலை 4 மணி அளவில் பொன்னாங்கழிக் கானல் நீரோடையிலிருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டு நான்கு ரதவீதியிலும் உலா வரப்பட்டது. சக்கர தீர்த்த தெப்ப குளத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. சக்கர தீர்த்த தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் ஏராளமான பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றினார். ஐந்து வகையான பெரிய அலங்கார தீபங்கள் தெப்பக்குளத்திற்கு காண்பிக்கப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை ஜெயராமன் பட்டர், ரகுபதி ஐயங்கார் செய்தனர். ஏற்பாடுகளை தர்ம ரக்ஷண ஸமிதி, ராமேஸ்வரம் சேது சமுத்திர ஆரத்தி குழு, சமூக சேவை தொண்டு நிறுவத்தினர் செய்திருந்தனர். நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருக்கவும், உலக நன்மை வேண்டியும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.