நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி கண் திறப்பு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2023 02:03
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி கண் திறக்கும் விழா நடந்தது.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி பெருந்திருவிழா கடந்த பிப்.20 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.21 பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்க்கதில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலில் தற்போது வரை 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து அம்மன் குளத்திலிருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பம் கோவிலில் வைக்கப்பட்டு அதில் பக்தர்கள் பால் ஊற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
பிப்.24,28 அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம் வாகனத்திலும் இன்று அன்ன வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மின் ரத ஊர்வலம் நடந்தது. தினமும் கோவிலில் பக்தர்கள் பால்குடம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், பொங்கல் வைத்தல், அபிஷேக தீர்த்தம் எடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். இன்று காலை பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூக்குழி கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை திரவிய அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 7 காலை அக்னி சட்டி எடுத்தல், கழுகு மரம் ஏறி பின் பல்லாயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.