சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு : பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2023 04:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷ வழிபாட்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 4:30மணிக்கு மேல் சுந்தரமாகலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சாமிக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.