உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மக தீர்த்த வாரி வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 03:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி வைப்போம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகத்தன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் பாதம் தாங்கிகளில் புறப்பாடாகி கடலூர், தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி வைபவம் காண்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக தடைபட்ட விழா நேற்று கோவில் வளாகத்திலேயே நடந்தது. காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சக்கரத்தாழ்வார் கண்ணாடி அரை மண்டபத்தில் எழுந்தருளி மகா அபிஷேகம் நடந்தது. சக்கரத்தாழ்வார் புறப்பாடாகி சக்கரதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. தொடர்ந்து கண்ணாடி அரை மண்டபத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சக்கரத்தாழ்வாருக்கு தீபாராதனை, நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, சாற்றுமறை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி சன்னதி வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியர் சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.