கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 03:03
வில்லியனுார் : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் நேற்று நடந்த மாசிமக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் உள்ள காமாட்சி, மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கடந்த 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவாக 28 ம் தேதி பரிவேட்டையும், 4ம் தேதி இரவு திருக்கல்யாணம், 5ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று மாசிமக தீர்த்தவாரி நடந்தது. விழாவில் உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம், அரியூர், செல்வா நகர், செல்லஞ்சேரி, திருக்காஞ்சி, தனத்துமேடு, கிளிஞ்சிகுப்பம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சதீஷ், சிறப்பு அதிகாரி சீத்தாராமன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.