திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 03:03
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் கடந்த, பிப்.26 ல் கொடியேற்றத்துடன துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. புறப்பாடும் நடைபெற்று வந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் புறப்பாடாகி அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 10:00 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. தொடர்ந்து தெப்ப மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். 11ம் திருநாளில் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.