பதிவு செய்த நாள்
14
செப்
2012
12:09
புளியங்குடி : புளியங்குடி கற்பக விநாயகர், சக்தி மாரியம்மன், ஆரியங்காவு கருப்பசாமி கோயில் பூக்குழி திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. புளியங்குடி கற்பக விநாயகர், சக்தி மாரியம்மன், ஆரியங்காவு கருப்பசாமி கோயில் 11வது ஆண்டு பூக்குழி திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து அபிஷேகம், சக்தி ஹோமம் மற்றும் பூ வளர்த்தலும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தாய் வீதிஉலா மற்றும் பூ இறங்குதல், அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், 9 மணிக்கு வில்லிசை கச்சேரியும் நடக்கிறது. 19ம் தேதி காலை தீர்த்தக்குடம், மஞ்சள் பால்குடம் மற்றும் பால்குடம் அழைத்தலும், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும், மாலை 3 மணிக்கு சிவன் பானை அன்னப்பெட்டி முளைப்பாரி அழைப்பும், இரவு 12 மணிக்கு சாம படைப்பு மற்றும் மகா பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி அதிகாலை 2 மணியளவில் குரு பூஜை, அன்னதானமும், காலையில் பொங்கல்பானை அழைப்பும், மதியம் நேர்த்திக்கடன் செலுத்துதலும், மாலை 3 மணிக்கு மஞ்சம் நீராட்டும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அய்யாவின் வழிநடப்போர் செய்து வருகின்றனர்.