Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : பங்குனி ராசி பலன்.. கவலை ... துலாம் : பங்குனி மாத பலன்.. வீண் பேச்சை குறைப்பது நல்லது! துலாம் : பங்குனி மாத பலன்.. வீண் பேச்சை ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கன்னி : பங்குனி ராசி பலன்.. பணவரத்து திருப்தி தரும்.. பேச்சால் வெற்றி!
எழுத்தின் அளவு:
கன்னி : பங்குனி ராசி பலன்.. பணவரத்து திருப்தி தரும்.. பேச்சால் வெற்றி!

பதிவு செய்த நாள்

13 மார்
2023
11:03

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எந்த பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்யும் குணமுடைய உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். எதிர்ப்புகள்  விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி  சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம்  பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார  நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும்.  மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள்  குறையும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்னைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும்.  பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: சிவபுராணம் பாடி சிவனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 23, 24
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 30, 31

ஹஸ்தம்: அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் ஹஸ்த நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்தும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். எதிலும் உடனடியாக முடிவு  எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான  விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.  பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை  முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக  இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 24, 25
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 31

சித்திரை 1, 2 பாதங்கள்: நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் செவ்வாய் உங்கள் ராசியை நான்காம் பார்வையாக பார்க்கிறார். எந்த காரியத்தையும் செய்து  முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.  கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சல் சோர்வு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க  வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில்  வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது  நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்கள் பணவரவு காண்பார்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஆகும். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும். நீங்கள் எதிர்பார்த்த  பலன்கள் நடக்கத் துவங்கும். உங்கள் பொதுப்பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவர். கலைத்துறையினருக்கு நீண்ட காலமாக  நீங்கள் கண்ட கனவு பலிக்கும். ஆடம்பரப் பொருட்களைச் சேர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க  வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: கிராம தெய்வத்தை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 25, 26
அதிர்ஷ்ட தினம்: ஏப்.1

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar