Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : பங்குனி மாத பலன் மேஷம்: சித்திரை மாத பலன் மேஷம்: சித்திரை மாத பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம் : பங்குனி மாத பலன்
எழுத்தின் அளவு:
மீனம் : பங்குனி மாத பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2023
11:03

பூரட்டாதி 4ம் பாதம்:
மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் ராசிநாதன் மற்றும் நட்சத்திரநாதன் குரு பகவான் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார்.  தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை  தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான  பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை  தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.  பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு ராசியில் சனி இருப்பதால் கவனமாக பேசுவது  நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக  நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக  மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 5, 6

அதிர்ஷ்ட தினம்: மார்ச் 16, 17; ஏப்.12, 13

உத்திரட்டாதி:
எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த  தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து  திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம்  வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில்  செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன்  சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு  காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு  காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து  பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி சாதனைகள் புரிவீர்கள். தொழில்நுட்ப பயிற்சி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி  வரலாம்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
சந்திராஷ்டமம்: ஏப்.6, 7
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 17, 18; ஏப்.13

ரேவதி:
எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் ரேவதி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால்  நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.  நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையை தரும்.  நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க  வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான  பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். அலுவலக எதிரிகள் காணாமல் போவார்கள். கிடைக்கும் ஆதாயத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். அலுவகத்தில் சிறப்பாக பணிபுரிவதால் சிறப்பு சலுகைகள்  கிட்டும். பழைய இழப்புகள் இப்பெயர்ச்சியில் சரிசமமாகும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில்  நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். பெண்களுக்கு உங்களது  முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க  வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர  முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான  பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.
சந்திராஷ்டமம்: ஏப்.7, 8
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 18, 19

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar