பதிவு செய்த நாள்
15
செப்
2012
10:09
காரைக்கால்: பெங்களூருவில் நடந்த இந்து தர்ம பாதுகாப்பு மாநாட்டில், திருநள்ளார் சிவாச்சார்யருக்கு சைவ தர்ம ரக்ஷண திலகம் பட்டம் வழங்கப்பட்டது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் பெங்களூருவில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை அகில பாரத சநாதன இந்து தர்ம பாதுகாப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில், பல மாநிலங்களில் இருந்து 7,000 பேர் கலந்து கொண்டனர். விழாவில் பூஜ்ய ஸ்ரீ பரட்ஜா சுவாமினி மாதா ஸ்ரீ ரவிசுப்ரமணியன் எம்.எல்.ஏ., மேயர் வெங்கடேசமூர்த்தி, புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.பி., சுப்ரமணியசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்து தர்மத்தின் சிறப்பு, இந்து தர்ம கோட்பாடு, ஆகமம், பூஜை நெறிகள், சடங்குகள், சம்பிரதாயம் உள்ளிட்ட பல தலைப்புகளில் கருத்தரங்கு நடந்தது. மாநாட்டில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத் துணை தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியாவுக்கு, "சைவ தர்ம ரக்ஷணா திலகம் விருதினை, சங்கத் தலைவர் சிவஸ்ரீ சோமசுந்தர தீஷிதர் வழங்கினார்.