பதிவு செய்த நாள்
15
செப்
2012
11:09
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், நரிக்குறவர்கள், காளிக்கு பலி கொடுத்த எருமையின் ரத்தத்தை குடித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவாடானை அருகே, சமத்துவபுரத்தில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் காளிக்கு, எருமைகள் மற்றும் ஆடுகளை பலி கொடுத்து, விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, திருவாடானை சன்னிதி தெருவிலிருந்து, ஏராளமானோர், ஊர்வலமாக சமத்துவபுரம் சென்றனர். அன்று இரவு முழுதும், காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். நேற்று காலை, 6:00 மணிக்கு, மூன்று எருமைகளை பலி கொடுத்தனர். கழுத்திலிருந்து வடியும் ரத்தத்தை, சிறுவர்கள் உட்பட அனைவரும் குடித்தனர். ஆடுகளும் பலி கொடுக்கப்பட்டன. நரிக் குறவர்கள் கூறுகையில், "எங்கள் குல தெய்வமான காளிக்கு, ஆண்டுதோறும், எருமைகளை பலி கொடுக்கிறோம். நாடு நன்றாக இருக்க வேண்டும்; நல்லமழை பெய்ய வேண்டும்; நாங்களும் நன்றாக இருக்க வேண்டும் என, பலி கொடுக்கிறோம் என்றனர்.