பதிவு செய்த நாள்
18
மார்
2023
10:03
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், காணிக்கையாக ஒரு கோடியே 7 லட்சத்து 37 ஆயிரத்து 553 ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்த உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனுார் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் சிவாகரன், ஆய்வாளர் சங்கீதா, தினேஷ் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், ஒரு கோடியே 7 லட்சத்து 37 ஆயிரத்து 553 ரூபாயும், 324 கிராம் தங்க நகைகள், 2045 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக இருந்தன. இப்பணியின்போது அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல் உடனிருந்தனர்.