பதிவு செய்த நாள்
20
மார்
2023
10:03
கொல்லங்கோடு : கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு 1352குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை நிறைவேற்ற பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பரணி துாக்க திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி குழந்தைகளுக்கான துாக்க நேர்ச்சை நடக்கிறது. துாக்க ரத வில்லில் நேர்ச்சை குழந்தைகளுடன் கோவிலை வலம் வரும் துாக்ககாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர்களின் உடல் திறனை சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதி சான்றிதழை வழங்கினர். தேர்வான துாக்ககாரர்கள் நேற்று முதல் துாக்க நேர்ச்சை முடியும் வரை கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருப்பர்.
பெயர் பதிவு: இந்த நிலையில் நேர்ச்சை குழந்தைகளும் துாக்ககாரர்களும் நேற்று குலுக்கல் முறையில் வரிசை படுத்தபட்டனர். இதில் 1352 குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்ற பெயர் பதிவு செய்யபட்டு உள்ளது. அத்துடன் அம்மன் துாக்கம் 1, பண்டாரதுாக்கம் 1, பிடாகை துாக்கம் 1, அரசு துாக்கம் 1, ரிசர்வ் துாக்கம் 30 என 1386 துாக்கம் நடக்கிறது. முதல் ரதத்தில் அம்மன் துாக்கம், ப ண்டாரதுாக்கம், பிடாரை துாக்கம், அரசு துாக்கம் என 4 துாக்கம் நடக்கும். குழந்தைகள் இல்லாமல் இந்த 4 துாக்கமும் நடக்கும்.
346 முறை ரதவலம்: அதை தொடர்ந்து குழந்தைகளுக்கான துாக்கம் துவங்கும். நேர்ச்சை குழந்தைகளுக்காக நிர்ணயிக்க பட்ட துாக்ககாரர்களுக்கு துாக்க ரதத்தில் ஏற உடல்நலம் குடும்ப நலன் சார்ந்த இடை யூறுகள் இருப்பின் ரிசர்வ் துாக்ககாரர்களின் மூலம் அந்த நேர்ச்சை நிறைவேற்றப்படும். ஒரு ரதத்தில் 4 பேர் வீதம் 346 முறை ரதம் கோவிலை வலம் வரும். இதனால் நள்ளிரவை தாண்டி நடக்க வாய்ப் புண்டு. ஏற்பாடுகளை கோவில் தலை வர் வழக்கறிஞர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, இணை செயலாளர் பிஜூ, துணை தலைவர் சதிகுமாரன் நாயர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.