ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா: மார்ச் 28ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 12:03
ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 22- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 5 அன்று நடக்கிறது. மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாளன்று ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு மார்ச் 28 காலை 10:35 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. ஏப்ரல் 1 இரவு கருட சேவை, ஏப்ரல் 5 காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டம், இரவு 7:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் ஆடிப்பூர கொட்டகையில் அமைக்கப்பட்ட பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம், ஏப்ரல் 9 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்ப யாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.