பதிவு செய்த நாள்
24
மார்
2023
10:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான காளஹஸ்தி அடுத்துள்ள ஊரந்தூர் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயிலை சுமார் 40 லட்சத்தில் பழமையான கோவிலை நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள ஊரந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ நீலகண்டேஸ்வர சுவாமி கோவிலை நவீனப்படுத்தி மகா கும்பாபிஷேகம் நடத்த ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. ஸ்ரீ நீலகண்டேஸ்வர ஸ்வாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடந்து 30 ஆண்டுகள் ஆனதால் மீண்டும் மகா கும்பாபிஷேகத்தை நடத்த ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று வியாழக்கிழமை பூமி பூஜை நடத்தப் பட்டது ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன ரெட்டியின் உத்தரவின் பேரில் கோயிலின் மேல்( கூரையில்)பகுதியில் கசிவைத் தடுக்க புதிய ஸ்லாப் நிறுவுதல் போன்ற பல்வேறு பணிகளை கோயிலுக்குள் முன்மொழிந்தனர். மேலும், கோவிலுக்கு முன்பாக உள்ள ஆருத்ரா உற்சவ மண்டபத்தை அகற்றி, புதிதாக மண்டபம் கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாதம் 29ம் தேதி ஆருத்ரா விழாவை முன்னிட்டு, விழா முடிந்த பின், மணிமண்டபப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ( மூடம்) வர உள்ளதால் முன்னதாக பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆருத்ரா நட்சத்திரம் (பண்டிகைக்கு) பிறகு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் மேலும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு கூறியதாவது:கோயில்( இன்ஜினியரிங் ) பொறியாளர் முரளிதர் ரெட்டி, டிஇ சீனிவாசலு ரெட்டி, ஏ.இ.ராஜா பவன் கல்யாண் ஸ்தபதி குமார், துணை கோயில் பொறுப்பாளர் லட்சுமையா, தேவஸ்தான அலுவலர்கள் பாலாஜி தேவஸ்தான அர்ச்சகர்கள் ஜனார்த்தன சுவாமி மற்றும் இவர் களுடன் கிராம தலைவர்கள் கிரி சுவாமிகள் துளசிராம் ரெட்டி, பாலி ரெட்டி, சந்திரா ரெட்டி, விஜய பாஸ்கர் ரெட்டி, ராமிரெட்டி, கிருஷ்ணய்யா, கோபி கவுட், நீலகண்ட ரெட்டி, குரவையா, வழக்கறிஞர் தர்மையா, சீனிவாசலு ரெட்டி, ராமச்சந்திர ரெட்டி, முரளி, ரங்கய்யா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.