பதிவு செய்த நாள்
24
மார்
2023
10:03
கடையநல்லுார்: கடையநல்லுார் அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று பூர்வாங்க பூஜைகள் நடந்தன.
கடையநல்லுார் சோழிய பிராமண சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அபீதகுசநாயகி சமேத அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 27ம் தேதி ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை உள்ளிட்டவை நடந்தது. 8 மணிக்கு கஜ பூஜை, கோஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்ஸங்க்ரஷணம் நடந்தது. இன்று (24ம் தேதி) காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், அக்னிஷங்க்ரஹணம், யாகசாலை அமைத்தல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கலாகர்ஷ்ணம், கடம் யாகசாலை பிரவேசம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. நாளை (25ம் தேதி) காலை 8.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, விசேஷ சாந்தி, பூதசுத்தி, 10.30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
11.30 மணிக்கு திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரவு 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 9 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 26ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, விசேஷ சாந்தி, பூதசுத்தி, 11.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 6.05 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, விசேஷ சாந்தி, பூதசுத்தி, இரவு 8 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை, கன்யா பூஜை நடக்கிறது. 27ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திரக்சாபந்தனம், நாடி சந்தானம் நடக்கிறது. 9 மணிக்கு கடம் எழுந்தருளல் நடக்கிறது. 9.30 மணிக்கு அபீதகுசநாயகி அம்பாள், அருணாசலேஸ்வரர் கோயில் புரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை துாத்துக்குடி ஆலால சுந்தர சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் நடத்துகிறார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் சந்திரசேகர் பட்டர் கலந்து கொள்கிறார்.மதியம் 12.05 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் குதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு ஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.