காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ கொடியோற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2023 15:01
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா முன்னிட்டு கொடியோற்றத்துடன் துவங்கியது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா இன்று பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷபகொடி ஏற்றப்பட்டது.பின் விநாயகர், சுப்ரமணியர், கயிலாசநாதர், சுந்தாம்பாள். சண்டிகேஸ்வரர், அஸ்திர வேதர் புறப்பாடு நடந்தது. பின் நவசந்தி யாக பூஜை தீபாரதனை நடந்தது. நாளை மாலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் முஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும் கயிலாசநாதர் சூரிய பிரபை. சுந்தராம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும் சண்டிகேஸ்வர் ரிஷப வாகனத்திலம் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 1ம் தேதி திருக்கல்யாண உத்ஸ்வம்.3ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. வரும் 6ம் தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலக்குழுவினர் தலைவர் வெற்றிச்செல்வம். துணைத்தலைவர் புகழேந்தி செயலாளர் பாஸ்கரன்,பொருளாளர் சண்முகசுந்தரம்.உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் சிவகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.