Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண ... வடமதுரை காளியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் வடமதுரை காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம்
எழுத்தின் அளவு:
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
13:36

தஞ்சாவூர்:  கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாடல் பெற்ற ஸ்தலமாக, மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வர் கோவில் விளங்குகிறது.மகாமகத்திற்கு முதன்மையான கோவிலாகும். இக்கோவில், கடந்த 2009, ஜூன்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் 8 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணிகளை துவங்குவதற்கான பாலாலயம் செய்வதற்காக, கடந்த மார்ச். 24ம் தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25ம் தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜைகளும், 26ம் தேதி இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இன்று காலை அதிகாலை 4 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், காலை 6:10மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், திருப்பணிக்கான கொடிமரம் நடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுர்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு திருமறைநாதருக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெற்றது.சென்னை, வடபழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் 18 ஆம் நூற்றாண்டு சேர்ந்த செப்பு பட்டயம் கண்டறியப்பட்டது.பழநி முருகன் கோயில், 64 அயன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் தாயார் ... மேலும்
 
temple news
புதுச்சேரி, : புதுச்சேரி காந்திவீதி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar