திருமங்கலம்: திருமங்கலம் அருகே திருமாலில் பழமையான சிற்பங்கள் ஒரே இடத்தில் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவன் சிலம்பரசன் தகவலின்படி வரலாற்று ஆர்வலர்கள் அங்கு சென்று கள ஆய்வு செ ய்த போது நாயக்கர் கால சிற்பங்கள் என்று தெரியவந்தது. இந்த அரவான் களப்பலிக்கல் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் ஒரு மனிதத் திருமேனியும் பன்றியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் பன்றி என்பது முப்பலிகளில் ஒன்றாகும். நம் முன்னோர்கள் நெடுங்காலமாகவே சேவல்,,ஆடு, பன்றி, என முப்பலிகளை கொடுத்து வந்துள்ளனர்.அந்த வகை யினை சேர்ந்ததுதான் இந்த சிற்பம். மேலும் இந்த சிற்பத்தில் ஒரு மனித உருவமும் இடம்பெ ற்றுள்ளது. இவர் ஓர் அரவான் ஆவார். இந்த சிற்பத்தில் உள்ள நபர் ஊரின் நலன் கருதியோ, நாடு போரில் வெற்றி பெற வேண்டியோ, தன் இன்னுயிரை துச்சம் என கருதி தானே முன்வந்து களப்பணி கொடுப்பதே அரவான் களப்பலியாகும். மேலும் இது போன்ற சிற்பம் தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிற்பத்தில் ஒரு அரவான் நிர்வாணமாக வணங்கியபடி வேண்டுதலினை நிறைவேற்ற தயாராக உள்ளது போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.இவை மிகவும் அரிதான ஒன்றாகும்.
சதிக்கல் 1: இந்த சிற்பமும் அதே இடத்திலே யே காணப்படுகிறது.இரண்ரை அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓர் ஆண் மற்றும் ஒரு பெ ண் இடம் பெற்றுள்ளனர். ஆணின் வலது கையில் கத்தியை உயர்த்தி பிடித்தும், இடது கையில் கேடயத்தை பிடித்தபடியும். இடை யில் குருவாள் செ ருகியபடியும் தலை யில் இடப்புறம் சரிந்த கொண்டையுடன் மார்பில் அணிகலன்களுடன் இடை யில் இடைக்கட்சை அணிந்து கால்களில் வரீ கழலையுடன் கம்பரீமாக நின்ற கோளத்தில் வீரன் ஒருவன் செதுக்கப்பட்டுள்ளார். இவ்வீரன் போரில் வரீமரணம் அடைந்திருக்க வேண்டும். மனைவி உடன் கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆகவே இந்த சதிகல் இருவரின் நினைவாக நட்டு வைத்துள்ளனர். முற்காலங்களில் உடன்கட்டை ஏறுவது, தானே முன்வந்து தன் கணவன் இறந்த துக்கம் தாளாமல் உயிர்துறந்தனர்.
சதிக்கல் 2: இந்த சிற்பம் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்டதாகும். தலைக்கு மேலே நாசிக்கூடு செ துக்கப்பட்டுள்ளது. வீரன் தனது வலது கை யில் வாளினை உயர்த்திப் பிடித்தபடியும் இடையில் குறுவாளினை செருகியபடியும் இடது பக்கம் சரிந்த கொண்டை , மார்பில் ஆபரணம் காலின் ஓரமாக ஒரு மதுகுடுவை செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் மனைவியின் திருமேனியும் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் மலர்ச்சென்டும் இடது கையில் மது குடுவையை உயர்த்தி பிடித்தும் ஆடை ஆபரணங்களுடன் சிற்பம் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.
சதிக்கல் 3: இதில் வீரன் கைகளில் வாளினை உயர்த்தியபடியும், மனைவி மலர்ச்செண்டை உயர்த்தியபடியும் இருவரின் இடது கைகள் தொடையிலும் இருக்கும்படி சிற்பம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் முறை யான ஆய்வை மேற்கொண்டால் திருமால் கிராமத்தின் தொன்மையான வரலாற்றை யும் தமிழக மக்களின் தனித்துவமான வாழ்வியலையும் அறியலாம்.