பதிவு செய்த நாள்
29
மார்
2023
02:03
அமெரிக்கா, ஹவாய் பிரதேசம், குவாய் தீவு, சிவபெருமான் திருக்கோவில் ஸ்படிகலிங்க மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
குவாய் ஆதீனம் குருமஹாசந்நிதானம் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமிகள் அவர்களின் பெரும்முயற்சியால் இறைவன் திருக்கோவில், அமெரிக்கா நாடு, ஹவாய் பிரதேசம் பசும் பொழில் சூழ்ந்த, குவாய் தீவில், வைளுவா கங்கை நதிக்கரையில், சிற்ப சாஸ்த்ர முறையில், கோயிலை வடிவமைக்கும் பணியில் மகாபலிபுரம் பத்மபூஷன் சிற்பகலைமாமணி டாக்டர் வி.கணபதி ஸ்தபதி மற்றும் செல்வநாதன் ஸ்தபதி சீரிய மேற்பார்வையில் கைததேர்ந்த சிற்பிகளைகொண்டு பெங்களூரு கெஞ்சனஹள்ளியின் உள்ள, ஸ்ரீஞானா‘ இராஜ இராஜேஸ்வரி திருக்கோயிலில், ஸ்ரீ கைலாச ஆச்ரம ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருச்சி மஹா சுவாமிகளின் முன்னிலையில் சிலா சங்கரஹண பூஜையானது டிசம்பர் 20ஆம் தேதி 1990ஆம் வருடம் தொடங்க பெற்று, அதனை தொடர்ந்து, குவாய் தீவில், பஞ்சசிலாந்யாச பூஜை மற்றும் பூமி பூஜைகளானது ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதி 1995ஆம் ஆண்டு சிவாச்சார்ய குல பூஷணம்‟ “சக்தி கருணாகர சக்ரவர்த்தி” சென்னை காளிகாம்பாள், திருக்கோயிலின் சிவாச்சார்யார், சாக்தஸ்ரீ வு.ளு. சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், பொற்கரங்களாலும், குவாய் ஆதீனம், குருதேவ், ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இத்திருக்கோவில் இயற்கை சுற்று சூழல் நிறைந்த இடத்தில் கோயில் முழுவதும் கருங்கற்களால் வடிவமைத்து மூலதிருமேனி பஞ்சலோகத்தினால் செய்த ஆவுடையாருடன், ஸ்படிக லிங்கத்திருமேனியாக நிர்மானம் செய்து மேலும், மூல விமானம் கருங்கற்களினால் செய்து தங்கத் தகடுகள் பொறுத்தி அற்புதமான முறையில் இவ்வாலயத்தை உருவாக்கியுள்ளார்கள். மேலும் இத்திருக்கோவில் கோஷ்டத்தில் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பிரம்ம மூர்த்தங்களை பஞ்ச லோகத்தினால் வடிவமைத்து, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், வசந்த மண்டபம், த்வஜஸ்தம்பம், நந்தி பலிபீடம், கூடிய சிவாலயமானது சிற்ப சாஸ்த்ர முறைபடி நிர்மானித்து பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம், சிவாகம முறைப்படி, குவாய் ஆதீனம் ஸ்ரீ போதிநாத வேலாயன் சுவாமி தலைமையில், “சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில் சிவாச்சார்யார், வேதாந்த சிரோமணி, சிவாகம வாசஸ்பதி சிவஸ்ரீ சண்முக சிவாச்சார்யார், சர்வ சாதகத்திலும் மற்றும் பெங்களுரு, வாழும் கலை மையம், வேத ஆகம சம்ஸ்க்ருத மஹாபாடசாலை, ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்தின் பிரின்சிபால் சிவாகம விசாரதா, சிவாகம கலாநிதி, சிவஸ்ரீ அவிநாசி ளு. சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் முன்னிலையில் மூன்று யாகசாலை அமைத்து மார்ச் 21ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி ஆறுகால யாக பூஜைகள் சிவாகம முறைப்படி நான்கு வேதங்களும், சிவாகமங்கள் மற்றும் பன்னிரு திருமுறை பாராயணங்களுடன் நாதஸ்வர இன்னிசை, சங்கீதம் மற்றும் நாட்டிய கலைநிகழ்ச்சிகளும் கூடிய கும்பாபிஷேக விழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து. கடந்த மார்ச் 26ம் தேதி காலை 10.19 மணிக்கு மேல் 10.31 மணிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.