பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
03:04
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி கடந்த மார்ச் 24 காளியம்மனுக்கு பிடிமண் கொடுத்து, சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் கோவில் முன் கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று கிராம தெய்வங்களுக்கு பழம்வைத்தல், இரவு அம்மன் அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் பக்தர்கள் புடை சூழ கோவிலுக்கு வந்தது. இன்று காலை பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி, கரும்புத் தொட்டில், அழகு குத்துதல், அங்கப் பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.