கோவை: சொக்கம்புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக கடந்த 3ம் தேதி அன்று விநாயகர் வேள்வி, மற்றும் காப்புகட்டும் நிகழ்வு நடந்தது.இதைதொடர்ந்து இரண்டாம் காலவேள்வி 04.04.2023 அன்று நடந்தது.இதையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் சுவாமி விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் .108 திரவிய அபிஷேகம் ஆகியன நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.