வரசித்தி விநாயகர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 03:04
கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தை அருகே உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் வள்ளி, தேவசேனாவுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.