மயிலம : மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி, முத்துப்பல்லக்கு விழா நடந்தது.
கோவிலில், பங்குனி உத்திர உற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனையும், சுவாமி வெவ்வேறு வாகனங்களில் ஊர்வலமும் நடந்தது. கடந்த 4ம் தேதி காலை 6:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முத்துப் பல்லக்கு விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.