பதிவு செய்த நாள்
10
ஏப்
2023
06:04
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப். 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மன் சிம்மம் காமதேனு, வேதாளம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக 9 ம் நாள் திருவிழாவான இன்று இரு கோயில்களிலும் கயர்குத்து திருவிழா நடந்துது. பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், அக்னி சட்டி எடுத்து , உருண்டு கொடுத்து , மாவிளக்கு எடுத்து, கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகாசியில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்து அரிசிக் கொட்டகை மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பட்டாசு உள்ளிட்ட ஆலைகளுக்கு, கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பலர் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கினர்.