பதிவு செய்த நாள்
12
ஏப்
2023
10:04
அவிநாசி: .அவிநாசி,கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில்,பொங்கல் பூச்சாட்டு விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
அவிநாசி, கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவிற்கான காப்புக் கட்டு, நந்தா தீபம் ஏற்றுதல் மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து படைக்கலம் எடுத்து வருதலுடன் தொடங்கியது. பொங்கல் பூச்சாட்டு விழாவில், இன்று புதன்கிழமை முதல் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை,காலை மற்றும் மாலை வேளைகளில் அபிஷேக ஆராதனைகள் அழகு நாச்சியம்மனுக்கு தொடர்ந்து நடைபெறும். அன்று இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 19ம் தேதி புதன் அன்று அம்மை அழைத்தல், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.அதனைத் தொடர்ந்து,அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக அழகு நாச்சியம்மன் கோவிலுக்கு,பூவோடு எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. மேலும் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 20ம் தேதி,வியாழக்கிழமை மஞ்சள் நீர், மஹா அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், அம்மன் திருவீதி உலாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவில் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.