குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில், 75 வது ஆண்டு காமதேனு வாகன ஊர்வலம் நடந்தது.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. காந்திபுரம் மக்கள் சார்பில் நடந்த 75 வது ஆண்டு காமதேனு வாகன ஊர்வலம் நடந்தது. ஓம் சக்தி மகளிர் சார்பில் தீர்த்த குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க, பூகாவடி, மயில் காவடியுடன், அம்மன் ஊர்வலம் நடந்தது. அன்னதானம், இன்னிசை கச்சேரி நடந்தது.