பதிவு செய்த நாள்
13
ஏப்
2023
06:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை, தமிழ் புத்தாண்டு தினத்தன்று, மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வரும், ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தன்று, அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு, இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அன்று காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு, பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வர, திருக்கோவிலின் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.