பந்தலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2023 03:04
பந்தலூர் : பந்தலூர் அருகே நெல்லியாளம் டான்டீ தேயிலை தோட்டத்தில், முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன், துவங்கியது. தொடர்ந்து கோட்ட மேலாளர் ராமன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தேர் ஊர்வலம், பால்குடம் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி, சுழல் காவடி, ஆசன காவடி, தொங்கு காவடி, கத்தி காவடி, பறவை காவடி ஊர்வலம், அக்னி காவடியுடன் பூகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கன்டினர் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் செய்துள்ளனர்.