Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : குருப்பெயர்ச்சி பலன் .. கடன் ... தனுசு : குருப்பெயர்ச்சி பலன் .. அதிர்ஷ்டம் தேடி வரும் தனுசு : குருப்பெயர்ச்சி பலன் .. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் .. குடும்பத்தில் குதுாகலம்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் .. குடும்பத்தில் குதுாகலம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
01:04

விசாகம்: ஆன்மிக நாட்டம் கூடும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதின்மூன்றாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குருவின் அம்சத்தின் பிறந்த நீங்கள் அடுத்தவருக்காக அதிகம் உழைப்பவர்கள். எப்போதும் அடுத்தவர்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்கும் உங்களுக்கு குரு பகவான் நட்சத்திர நாதனாவார். முதல் மூன்று பாதங்களுக்கு ஏழாமிடத்திற்கும் கடைசி பாதத்திற்கு ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார். எதிர்பார்த்த செயல்கள் சாதகமாக நடக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
போட்டி, எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நேரம் தவறி உண்ண வேண்டியிருக்கும். வாகனம், வீடு வகையில் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
இஷ்டத்திற்கு விரோதமான சூழல் உருவானாலும் முடிவு சாதகமாக இருக்கும். மனதில் அவ்வப்போது வீணான ஆசைகள் தோன்றும். மனக்கட்டுப்பாட்டுடன் புறக்கணிப்பது நல்லது. அகலக்கால் வைக்காமல் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருங்கள். நெடுநாளாக நடக்கும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உலக விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டாகும்.
குடும்பம் பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் உடனுக்குடன் தீர்வதற்கான வழி கிடைக்கும். குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பர். மருத்துவச் செலவு குறையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பது நன்மையளிக்கும். பக்தி எண்ணம் மேலோங்கும். ஆன்மிகச் சுற்றுலாவாக செல்ல வாய்ப்புண்டு. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். திருட்டு போன பொருளும் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு வீடு அல்லது ஊர் மாற்றம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே சாதகமான பலன் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தொழிலாளர் ஒத்துழைப்புடன் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல், உடல்சோர்வு ஏற்படலாம். வீண் கருத்து மோதல்களை தவிர்க்கவும். பணிச்சுமை காரணமாக கூடுதலாக உழைக்க நேரிடும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவதில் தாமதம் உண்டாகலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும் சிறப்பான காலகட்டம் இது. பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பேசிப் பழக வேண்டாம்.  கணவரின் ஒத்துழைப்பால் நிம்மதி காண்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள்.
அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.  மக்கள், தொண்டர்களின் மத்தியில் மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். எந்த சவாலான விஷயத்தையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.கட்சியினர் மத்தியில் திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.  
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிப்பர். வீண்பொழுது போக்குகள், தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.   விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.


அனுஷம்: குருவருளால் குறையில்லை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். செவ்வாய் - சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் சுகதுக்கம் பாராமல் உழைப்பவர்கள். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலுடைய உங்களுக்கு குருபகவான் தனவாக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகி ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது பார்வையால் 2 - 10 -12 ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். பணவரவு அதிகரிக்கும். குருவின் மாற்றத்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும்.  சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பால் நன்மை கிடைக்கும்.
மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தான் எடுத்த முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றிக் கொள்ளாமலும், திறமையால் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனையும் பெறுவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் லாபம் நிறைவாக கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குருவருளால் இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். அதே நேரம் கோபத்தை விட்டு நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சில நேரத்தில் விபரீதமான ஆசைகள், எண்ணங்கள் தோன்றலாம் கவனமுடன் புறக்கணிப்பது அவசியம். புறம் பேசுபவர்களின் உறவைத் தவிர்த்து விடவும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவர்.
தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதிஉதவி கிடைக்கும். கடன் பிரச்னைகள் படிப்படியாக குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர்.  கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வருங்கால வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டுவதோடு வளர்ச்சி நோக்கில் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பணியாளர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
சிலர் பணிச்சுமைக்கு ஆளாக வாய்ப்புண்டு. கூடுதலான நேரம் உழைக்க நேரிடும். பணிகளை கிடப்பில் போடாமல் உடனுக்குடன் விரைந்து முடிப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம். சிலர் மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பர். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவர்.  

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் வகையில் வீண் அலைச்சல், செலவு உண்டாகலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சகோதர் நலனுக்காக பாடுபடுவீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். நிச்சயம், திருமணம், வளைகாப்பு என சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
பெண்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவர். பணவரவு திருப்தி தரும்.
தோழிகளின் சந்திப்பால் மனசந்தோஷத்திற்கு ஆளாவீர்கள். அவர்களின தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் வருமானம் சீராக இருக்கும்.  சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.
கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மக்கள் ஆதரவு கண்டு மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்ப்பு, மறைமுகப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொண்டர்கள் மத்தியில் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மாணவர்கள் உற்சாகமுடன் படித்து முன்னேறுவர். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம்: வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபட துன்பம் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.


 கேட்டை: குடும்பத்தில் குதுாகலம்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினொன்றாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். செவ்வாய் - புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மனக்கணக்கு போடுவதில் வல்லவர். அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறனுடைய உங்களுக்கு குருபகவான் 6ம் இடத்திற்கு மாறுகிறார். தனவாக்கு ஸ்தானம் குருவின் பார்வை பெறுவதால் பணவரவு வரும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். விருப்பம் போல செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். ஆரோக்கியம் மேலோங்கும். வீடு, வாகன வகையில்  செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்க யோகமுண்டாகும்.
சிக்கன எண்ணமும் உழைக்கும் குணமும் உண்டாகும். புத்தி சாதுர்யமும், அறிவு திறனும் அதிகரிக்கும். மனம், உடலில் திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களின் செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணம் வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எனினும் சிக்கனமாக இருந்து சேமிப்பை பெருக்குவீர்கள். நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என சுபநிகழ்ச்சிகளால் குடும்பத்தில் குதுாகலம் கூடும்.
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை துாண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் நிதானமுடன் செயல்படுவது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பகை, கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் அனைத்தும் மாறும்.

எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சாதுர்யமான செயல்பாடுகளால் லாபம் கூடும். புதிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளை திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். திட்டமிட்ட பணிகளை முடிக்க கடுமையாக உழைப்பீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும்.
பணியாளர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். எந்த பிரச்னையிலும் யோசித்து முடிவு செய்வது நல்லது. வருமானம் திருப்தியளிக்கும். சக ஊழியர்களால் இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணிச்சுமையைச் சந்தித்தாலும் ஊதிய உயர்வுக்கு குறைவிருக்காது. புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்று முன்னேறுவீர்கள்.
 
பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். பேச்சால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானம் தேவை.

கலைத்துறையினருக்கு குருவின் சஞ்சாரம் பணவரவை அதிகப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  சக கலைஞர்களின் பாராட்டு கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
 
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடியும். ஆனால் கடின உழைப்பு தேவைப்படும். தலைமையின் ஆதரவுடன் புதிய பதவி, பொறுப்பு கிடைக்க வாய்ப்புண்டு. மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.  

அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். குரு சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.
மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்வர்.  நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு.
பரிகாரம்: சித்தர்களை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar