Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் .. ... மகரம் : குருப்பெயர்ச்சி பலன் .. கவுரவத்துடன் வாழ்வீர்கள் மகரம் : குருப்பெயர்ச்சி பலன் .. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
தனுசு : குருப்பெயர்ச்சி பலன் .. அதிர்ஷ்டம் தேடி வரும்
எழுத்தின் அளவு:
தனுசு : குருப்பெயர்ச்சி பலன் .. அதிர்ஷ்டம் தேடி வரும்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
01:04

மூலம்: ஆடம்பரமான வாழ்வு

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பத்தாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குரு - கேது கிரக அமைப்பில் பிறந்தவர்களான நீங்கள் நேர்மையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள். நியாயத்துடன் நடந்து கொள்ளும் உங்களுக்கு ராசிநாதன் குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது பார்வையால் ராசியை நோக்குகிறார். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.
சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு, விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. குரு சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.

நியாயமான செயல்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் திறமை அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  ரியல் எஸ்டேட் சம்பந்தமான விஷயங்களில் இருந்த மந்த நிலை மாறும்.
 குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை அடிக்கடி இருக்கும். அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் அன்பாக பேசுவது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களை கல்வி, வேலைவாய்ப்பு விஷயமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். ஆடம்பரமான வீடு, சொகுசு கார் என வாழ்வில் சந்தோஷம் கூடும்.   

தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் சூழ்நிலை உருவாகும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும்.

பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் பணி நிமித்தமாக வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்டபடி அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பர். தோழியர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். திறம்பட செயல்பட்டு தாய்வீட்டு பெருமையை நிலைநாட்டுவீர்கள். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். யாத்திரை சென்று வர வாய்ப்புண்டு.  
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம் கவனம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சிலர் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர். சுக்கிரன் சஞ்சாரத்தால் மனக்குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். பணிவிஷயமாக சிலர் நீண்ட துார பயணம் மேற்கொள்வர். அதன் மூலம் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மறைமுகப் போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் பெறுவீர்கள். தொண்டர்களுக்காக அதிகளவில் செலவு செய்ய நேரிடும்.
மாணவர்களுக்கு படிப்பில் திறமை அதிகரிக்கும். கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. எதிர்பார்ப்பு  நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். நண்பர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.
.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.


பூராடம்: அதிர்ஷ்டம் தேடி வரும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் ஒன்பதாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குரு - சுக்ரன் இணைப்பில் பிறந்த உங்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
உழைப்பதற்கு அஞ்சாத உங்களுக்கு குருபகவான் அனுகூலம் தரும் வகையில் மாற்றம் பெறுகிறார். அவரது ஸ்தான பலத்தாலும் பார்வை பலத்தாலும் நன்மைகளே நடக்கும். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல செயல்படுவீர்கள். சகோதர, சகோதரிகள் வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் வரும். பூமி தொடர்பான பிரச்னைகள்  அகலும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பிறருக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள். எடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். சதோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பணவரவு படிப்படியாக கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் குறையும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார், உறவினர்கள் இருந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அமோக லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். புதிய முயற்சிகள் எதையும் பலமுறை யோசித்துச் செய்யவும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கல் பணவிஷயங்களில் எச்சரிக்கை தேவை. வெளியூர் பயணத்தை தவிர்க்க முடியாது.
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத பணி, இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். வேலைப்பளு கூடுதலாகவே இருக்கும். அதற்கேற்ற பணபலன் கிடைக்கும்.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் நன்மை கிடைக்கும். எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவர். புகுந்த வீட்டில் எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். கணவர், குழந்தைகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தோழியர்களுடன் பொழுதுபோக்குகளில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பிறந்த வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவீர்கள்.
கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம்.  நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.   
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தரத்தேர்ச்சி காண்பீர்கள். சக மாணவர்களின் மத்தியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பணவிஷயத்தில் விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள். புதியவர்களுடன் அளவுக்கு அதிகமாக நட்பு கொள்ள வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நன்மையளிக்கும்.
பரிகாரம்: சிவன் கோயிலில் உள்ள பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்மை கூடும். கடன் தொல்லை அகலும்.


உத்திராடம்: நேரம் நல்ல நேரம்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் எட்டாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தந்தையாரின் குணாதிசயங்கள் அதிகம் நிறைந்திருக்கும். எந்த ஒரு காரியத்தையும் தலைமையாக முன்னின்று செய்ய ஆசைப்படும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாமிடத்திற்கும், மீதமுள்ள மூன்று பாதத்தினருக்கு சுக ஸ்தானமாக நான்காமிடத்திற்கும் மாறுகிறார். நீங்கள் நிதானமாக முடிவெடுத்தாலும் எடுத்த முடிவில் மாறாமல் இருப்பீர்கள். எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதகமான பலனைக் காண்பார்கள். நீண்ட துாரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். உயர்பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள்.
எந்த சூழலிலும் நேர்மையுடன் இயங்குவீர்கள். உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர் நீங்கள். குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். செய்தொழில் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஆர்வமுடன் ஏற்று நடத்துவீர்கள். கிரகங்கள் சாதகமான நிலையில் நல்ல காலமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

இழுப்பறியாக இருந்த விஷயங்களில் தடைகள் நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுக்காக சாதுர்யமாக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவர். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் நன்மையான பலன் கிடைக்கும். சமுதாயத்தொண்டு, பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த நிர்வாகப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாக கிடைக்கும். நிலுவைத்தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரம் தொடர்பாக கடந்த காலத்தில் திட்டமிட்ட அல்லது பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் நன்மை காண்பீர்கள்.  மறைமுகப் போட்டிகளைத் திறம்பட சமாளிப்பீர்கள். புதிய முதலீடு, விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள சாதகமான காலகட்டமாக இருக்கும்.

பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்று சம்பள உயர்வு காண்பீர்கள். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும். பணிரீதியாக அடிக்கடி தொலைதுாரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் அல்லது வேலை விஷயமாக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவர். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் பணியாற்றுவீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை.
அரசியல்துறையினர் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பர். பணவரவு திருப்தி தரும். செயல் திறமை கூடும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். இனிமையான பேச்சால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் அன்பும், ஆதரவும் பெருகும்.  

மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும். கலை, பண்பாடு, விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் படிப்பில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபமேற்றி குலதெய்வத்தை வழிபட்டு வர மனஅமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar