Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : குருப்பெயர்ச்சி பலன் .. ... மீனம் : குருப்பெயர்ச்சி பலன் .. வசந்தகாலம் வந்தாச்சு மீனம் : குருப்பெயர்ச்சி பலன் .. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் .. குருபார்வையால் குறை தீரும்
எழுத்தின் அளவு:
கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் .. குருபார்வையால் குறை தீரும்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
01:04

அவிட்டம்: கை நிறைய வருமானம்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் ஆறாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எடுத்த வேலையை கச்சிதமாக செய்பவர்கள்.
பக்குவமான அணுகுமுறையினால் காரிய வெற்றி பெறும் உங்களுக்கு குரு பகவானின் மாற்றம் பல வகையிலும் நன்மைகளைக் கொடுக்கும். முதலிரண்டு பாதங்களுக்கு நான்மிடத்திற்கும், ஏனைய இரண்டு பாதங்களுக்கு மூன்றாமிடத்திற்கு மாற்றம் நிகழ்கிறது. கைநிறைய வருமானம் வரும்.  செயலில் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முக்கிய வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகலாம். சிலருக்கு பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமதப்போக்கு காணப்படும். தொடர்பற்ற மனிதர்களால் வீண் சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நல்லது.  கனவுத்தொல்லையால் அவதிப்பட வாய்ப்புண்டு. வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு மறையும். ஆனால் உடல்நலனை எண்ணி  வருத்தப்பட வேண்டாம். சீராக இருக்கும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.  வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றி பெறும் காலகட்டம் இது.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானமுடன் செயல்படுவது  நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். கடன் தொல்லை அகலும். பேச்சில் தற்பெருமை தலைதுாக்கும். பயணங்களின் போது பொருட்களை விழிப்புடன் பாதுகாக்கவும். சுபவிஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படலாம்.

தொழில், வியாபார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிரிகளால் அவ்வப்போது இடையூறுகள் தோன்றினாலும் சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். கால தாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடையும். சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

பணியாளர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலிடத்துடன் ஏற்பட்ட மனகசப்புகள் நீங்கும். பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது.  சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும்.

பெண்கள் எதிர்த்துப் பேசாமல் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் கணவருடன் ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்ட முயல்வீர்கள். புகுந்த வீட்டினரின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தோழியரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பயணத்தின் போதும், வெளியூர் செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன்கோபம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. என்றோ செய்த வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்கால வளர்ச்சிக்காக அயராமல் பாடுபடுவர். வீண் செலவைக்  குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நல்லது. மேலிடத்தின் ஆதரவால் சிலர் பொறுப்பான பதவிகளைப் பெறுவர். அதன் மூலம் மனமகிழும் சூழ்நிலை உருவாகும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

மாணவர்களுக்கு வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், சகமாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். வீண் பொழுது போக்குளில் ஈடுபட வேண்டாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று  பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.


சதயம்: குருபார்வையால் குறை தீரும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் ஐந்தாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சனி - ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை எப்போதும் மேலோங்கும். அனுபவ அறிவை கொண்டு காரியங்களை சாதிக்கும் உங்களுக்கு தனவாக்கு லாபாதிபதியான குருபகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்வீர்கள். சுயராசியில் சனியின் பயணம் இருக்கிறது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அதே வேளையில் குருபகவான் ஒன்பதாமிடத்தை பார்ப்பதால் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம். குருவின் 5,7,9ம் பார்வைகளால் குறைகள் அனைத்தும் தீரும்.
அடுத்தவர்களை பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.  நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூக சிந்தனை அதிகம் கொண்ட உங்களுக்கு எதிலும் சாதகமான நிலை காணப்படும். பணவரவு அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதுாரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் அவ்வப்போது தடைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் குதுாகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து மோதல்கள் மறையும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். விரிவாக்க முயற்சிகள் வெற்றி பெறும். வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் வளர்ச்சி பெறுவீர்கள். வியாபார ரீதியான பயணங்களால் ஆதாயம் காண்பீர்கள். எதிரிகளின் மீது ஒரு கண் இருக்கட்டும். பழைய நிலுவைக் கடன்கள் வசூலாகும். புதிய உத்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இட, பணி மாற்றங்களும் கிடைக்கும். ஒதுக்கிய பணிகளை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணியிடத்தில் கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பயணங்களால் இனிய அனுபவம் காண்பீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களின் விருப்பம் அறிந்து கணவர் நிறைவேற்றுவார். வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.  எதிர்பார்த்த பணம் வர வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி நிலைக்கும்.
கலைத்துறையினர் வீண் விவகாரத்தில் சிக்க வாய்ப்புண்டு. சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களால் நன்மையை அடைவீர்கள். செயல்கள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். மறைமுகப் போட்டிகள் நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். தொலை துார பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.  மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். சமுதாயத்தில் புகழும் அந்தஸ்தும் உயரும். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களின் செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். ஞாபக மறதி, உடல்சோர்வுக்கு  இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது.  சுற்றுலா செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.


பூரட்டாதி: நண்பர்களால் நன்மை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் நான்காவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு பெரியோர்கள் சொல்படி கேட்டு நடப்பது நன்மை தரும்.உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் உங்களுக்கு குருபகவான் நட்சத்திர அதிபதி ஆவார். முதல் 3 பாதங்களுக்கு 3ம் இடத்திற்கும், கடைசி பாதத்திற்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை.

எல்லோரையும் பற்றிய விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் தன்மை உண்டாகும். உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் துாய்மையாக இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையில் இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக தொடரும். நண்பர்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
 
தொழில், வியாபாரத்தில் மனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். இருப்பினும் வியாபார தலத்தில் உங்களின் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் கவனம் இருப்பது நல்லது.  இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பி விட இடமுண்டு. தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் தடைகள் குறுக்கிட்டாலும் உடனடியாக அதற்கான தீர்வும் கிடைக்கும்.  
பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வை எளிதாகப் பெற்று மகிழ்வார்கள். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வருமானத்தின் காரணமாக வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும். எதிர்பாராத அலைச்சல், வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பெண்களுக்கு வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்த தம்பதியர் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும்.  திருமணம் தள்ளிப்போய் வந்த கன்னியருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு.  குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக் கூடிய வாய்ப்புண்டு.  

அரசியல்வாதிகள் தன்னலமற்ற  உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவர்.  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத் தரும். இதன் காரணமாக பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும்.  தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மதித்து நடப்பார்கள்.
மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டி, நடனம், இசை போன்ற பிற துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவர். அரசு வழங்கும் கல்விச் சலுகைகளைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.  நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar