பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
06:04
கோத்தகிரி: கோத்தகிரியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மறுநாடன் மலையாள மக்கள் சார்பில், கேரளா ரத ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தூங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. பல்வேறு உபயதார்களின் திருத்தேர் வீதி உலா மற்றும் அன்னதானம் இடம்பெற்றது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, மறுநாடமன் மலையாள மக்கள் சார்பில், கேரளா ரதம் திருவீதி உலா நடந்தது. கோத்தகிரி டானிங்ட்டன் பகுதியிலிருந்து ஊர்வலம் துவங்கியது. இதில், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க, தால பொலி ஏந்தி, திரளான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, பகவதி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு கண் கவர் வான வேடிக்கை நடந்தது. விழா ஏற்பாடுகளை, மறுநாடன் மலையாள மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.