திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 06:04
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் ஒன்றியம் திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாரி எடுத்தனர்.
இக்கோயிலில் பங்குனியில் பத்து நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும். ஏப்.15ல் காப்பு கட்டி விழா துவங்கியது. உற்சவர் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தொடர்ந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச் சொரிதல் நடத்தி வழிபட்டு வந்தனர். அலங்கார மின் ரதம் பவனி வந்தது. காலை முதல் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். மூலவர் வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு பக்தர்கள் சமர்ப்பித்த பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. 9ம் திருநாள் காலையில் பெருமாள் கோயிலிலிருந்து பக்தர்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக அம்மன் கோயில் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். நிறைவு நாளன்று திரளாக சுற்றுவட்டாரக் கிராமத்தினர் பங்கேற்றனர்.