ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் திருமஞ்சன குடம் அழைத்து வரப்பட்டு வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. 2,3ம் நாளில் பக்தர்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு, தீச்சட்டி, காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மேளதாளம் முழங்க அனுமன் வேஷம் இட்ட பக்தர்கள் ஆண்டிபட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். கோயில் சார்பில் அன்னதானம் நடந்தது.