Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் ... இன்று உலக நன்மைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆதிசங்கரர் ஜெயந்தி இன்று உலக நன்மைக்காக வாழ்க்கையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : பாதயாத்திரையாக வந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : பாதயாத்திரையாக வந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2023
09:04

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவிலுக்கு லட்சக்கணக்கான தென் மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில்  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமாரசுவாமி,  சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாளிக்கின்றனர். இங்கு வழங்கப்படும் பிரசாதமான திருச்சந்தூர்ண்டையை உட்கொண்டால்  4448 வியாதிகள் குணமடையும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு ஆண்டுதோறும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகரத்தார்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு பாதயாத்திரையாக இரண்டாவது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி இவ்வாண்டு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  லட்சக்கணக்கான நகரத்தார்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தங்களது உடைமைகள் மற்றும் கோவிலுக்கு செலுத்த வேண்டிய சீர்வரிசை பொருட்களை பாரம்பரிய முறைப்படி இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட கூண்டு வண்டியில் அனுப்பிவிட்டு அதனை பின் தொடர்ந்து பாதயாத்திரையாக நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் எல்லையை வந்தடைந்தனர். அவர்களுக்கு இன்று அதிகாலை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமாரசுவாமி சன்னதிகள் வழிபாடு செய்தனர். முன்னதாக அவர்கள் தங்களது குலதெய்வமான தையல்நாயகி அம்பாளுக்கு சீர்வரிசியுடன், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பின்னர் அவர்கள் பாதயாத்திரைக்கு துணையாக கொண்டு வந்த குச்சிகளை கொடிமரத்தில் காணிக்கையாக செய்து விட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டிற்கு எடுத்துச் சென்றனர். தென் மாவட்ட பக்தர்கள் தங்கள் யாத்திரையை முடித்துவிட்டு ஊர் திரும்ப வசதியாக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சீர்காழி டிஎஸ்பி. லாமேக் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar