கூத்தாண்டவர் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2023 12:04
பந்தலூர்: பந்தலூர் அருகே உட்பட்டியில் ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் திருவிழா சிறப்பு பூஜைகள் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவில் நிர்வாகி ஆசை தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட திருநங்கைகள் சங்க நிர்வாகி கார்த்திகா கொடியேற்றினார். தொடர்ந்து கூத்தாண்டவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளும், 30 ம் தேதி, அதிகாலை கண் திறப்பு, பலி பூஜைகள், திருநங்கைகளுக்கு தாலி கட்டுதல் மற்றும் தாலி அறுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், திருநங்கைகள், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.